
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். 2013 ல் அட்லீ இயக்கத்தில் வெளியான “ராஜா ராணி” என்ற படத்தின் மூலம் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து மென்பொருள் கன்டா, யோகன், திருட்டு விசிடி, உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
அதன் பின் காலா, விஸ்வாசம், அரண்மனை 3, என முன்னணி ஹீரோக்களின் படத்தில் நடிக்கத் தொடங்கினார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராகக் கலந்துகொண்டார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
இருப்பினும் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி கிளாமர் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கிறார். இந்நிலையில் பட்டுச் சேலையில் கியூட்டாகப் போஸ் கொடுத்து இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.




