
நடிகை ரம்யா பாண்டியனின் கியூட் கிளிக்……
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன். தமிழ் “ஜோக்கர்” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து சமூத்திரக்கனியுடன் “ஆண் தேவதை” படத்தில் நடித்துள்ளார்.
பின் ஒரு சில படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி யில் கலந்து கொண்டார். பின் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்யா பாண்டியன் அதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தனது சமூக வலைத்தளங்களில் அவ்வவ்போது கிளாமர் உடைகளில் போட்டோஷுட் எடுத்து வருகிறார்.இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் லேட்டஸ்டாக எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.



