தமிழீழ தலைநகரில் பெரும் பதற்றம்; பொலிஸ் நிலையத்தை எரித்த பொதுமக்கள்!

மூதூர் மட்டகளப்பு வீதி 3-சிடி சந்தியில் அமைந்திருக்கும் ( Safe Rest, Mowsooth Hotal ) அருகில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று (11) இரவு 8.20 மணியளவில் இடம்பெற்றதுடன், மணல் லொறி ஒன்று வீதியால் சென்ற துவிச்சக்கர வண்டி ஒன்றின் மீது மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மூதூர் சாபி நகரை பிறப்பிடமாகவும் ஆலிம் நகரில் வசித்தவருமான மஹ்ரூப் மசூம் (வயது-29) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

விபத்தை அடுத்து அப்பகுதியில் ஒன்று கூடியவர்களால் வீதி மறிக்கப்பட்டு ரயர்கள் எரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அருகில் இருந்த பொலிஸ் காவலரனும் தாக்குதலுக்கு உள்ளாகி எரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து பொலிஸாருடன் மக்கள் இணைந்து சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.