நாம் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும்….. தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரியங்கா காந்தியின் வாக்குறுதி!!!

இந்த செய்தியை பகிர

கர்நாடகாவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிர களமிறங்கியுள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் மக்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றது.

இதற்கமைய கர்நாடகாவில் 200 யூனிட்கள் இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என ஏற்கனவே காங்கிரஸ் அறிவித்திருந்த நிலையில் இன்றைய பிரச்சாரத்தின்போது தாங்கள் வெற்றிவாகை சூடினால் ஒவ்வொரு குடும்பத் தலைவிகளுக்கும் 2000 ரூபா இலவசமாக மாதாந்தம் வழங்கப்படும் என கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்துள்ளதுடன் இத்திட்டத்தின் கீழ் சுமார் 1.5 கோடி குடும்பத் தலைவிகள் பயனடைவார்கள் எனவும் தெரிவித்தார்.


இந்த செய்தியை பகிர