உலகத்தில் இவனைப்போல் ஒரு முட்டாளை பார்த்திருக்க மாட்டீர்கள்; என்ன செய்தான் தெரியுமா?

தமிழகம் – காட்பாடியில், ‘விஸ்வாசம்’ படம் பார்க்க டிக்கெட் எடுக்கப் பணம் தராததால், தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூர் புதுத்தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் (45). இவரின் மகன் அஜித்குமார் (20). தீவிர அஜித் ரசிகர்.

இவர் ‘விஸ்வாசம்’ படம் பார்ப்பதற்காக, ‘டிக்கெட்’ எடுக்க தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். பணம் தர மறுத்ததால், தந்தை மீது அவர் ஆத்திரத்தில் இருந்தார்.

தூங்கிக்கொண்டிருந்த தந்தை பாண்டியனை கொலைசெய்ய நினைத்த அஜித்குமார், பெட்ரோலை முகத்தில் ஊற்றி தீ வைத்தார்.

தீ பற்றியதால், தலை மற்றும் முகத்தில் பாண்டியனுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுசம்பந்தமாக, விருதம்பட்டு போலீஸார் வழக்குப்பதிவு செய்து தந்தையைத் தீ வைத்து எரித்துக் கொல்ல முயன்ற அஜித்குமாரை கைதுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.