டிசம்பர் மாதம் லண்டன் சென்று கிருஸ்மஸ் கொண்டாட உள்ளார் நடிகர் விஜய் அப்ப ஆடியோ லோஞ்ச்

இந்த செய்தியை பகிர

வருடா வருடம் டிசம்பர் மாதம் என்றால், நடிகர் விஜய் லண்டன் கிளம்பி விடுவது வழக்கம். அங்கே சென்று தான் அவர் தனது கிருஸ்மசை கொண்டாடி வருகிறார். அவரது மனைவியின் அப்பா மற்றும் அம்மா அங்கே தான் இருக்கிறார்கள். இன் நிலையில் இந்த வருடம் லண்டன் செல்ல அவர் ஆசையாக உள்ளார். ஆனால் நடுவே பிரச்சனைகள். அதாவது அவரது படமான வாரிசு, ஆடியோ வெளியீட்டு விழா நேரு அரங்கில் டிசம்பர் 24 இடம்பெற உள்ளது.

அதனால் நடிகர் விஜய் 24க்கு பின்னரே லண்டன் செல்வார் என்று எதிர்பார்கப்படுகிறது. இல்லையென்றால் இம்முறை லண்டன் செல்வதை அவர் சிலவேளை தவிர்க்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. இது இவ்வாறு இருக்க, தல அஜித் 60 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு வெளிநாடு செல்ல உள்ளார் என்ற செய்தியும் கூடவே வெளியாகியுள்ளது.

தல அஜித் நடித்த துணிவு படம் பொங்கல் அன்று வெளியாக உள்ளது. அந்தப் படத்திற்குப் பின்னர் அவர் 60 நாட்கள் ஓய்வு எடுக்க உள்ளார். அதன் பின்னரே அடுத்த படம் தொடர்பாக அவர் சிந்திக்க உள்ளாராம் என்கிறது கோடம்பாக்க செய்திகள்.


இந்த செய்தியை பகிர