அசலாக ‘சாகுந்தலா’ சமந்தாவாக மாறிய நடிகை கிளாமரால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி…!

Spread the love

நடிகை சமந்தா நடித்த ’சாகுந்தலா’ என்ற திரைப்படம் சமீபத்தில் தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியான நிலையில் இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் இந்தப் படத்தில் சமந்தாவின் கெட்டப்பில் நடிகை தர்ஷா குப்தா எடுத்த போட்டோ ஷூட் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சமந்தா நடிப்பில் குணசேகர் இயக்கத்தில் உருவான ’சாகுந்தலா’ என்ற திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருந்தபோதிலும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. இதனால் இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் இந்தப் படத்தில் ’சாகுந்தலாவாக நடித்த சமந்தாவின் கெட்டப் ரசிகர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’சாகுந்தலா’ சமந்தா போலவே நடிகை தர்ஷா குப்தா போட்டோஷூட் எடுத்து அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்தப் போட்டோஷூட்டில் கிளாமர் தூக்கலாக இருப்பதை அடுத்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். ’சாகுந்தலா’ கெட்டப்பில் இருப்பதை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் பெருமையுடன் பார்க்கிறேன் என்றும், என்னுடைய ஸ்வீட் டார்லிங் சமந்தா என்றும், அவருடைய கெட்டப்பில் இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். நடிகை சமந்தா கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு திறன் உள்ளவர் என்றும் தர்ஷா குப்தா அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.