அடேங்கப்பா… வேற லெவலில் அஜித்… வைரலாகும் புகைப்படங்கள் !

இந்த செய்தியை பகிர

நடிகர் அஜித் புதிய தோற்றத்திற்கு மாறியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்கு பிறகு அஜித்தின் 62வது படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விக்னேஷ் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் விலகித் தற்போது மகிழ் திருமேனி இயக்குவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

லைக்கா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிரூத் இசையமைப்பாளராகவும், நீரவ் ஷா ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றவுள்ளனர். தற்போது இந்தப் படத்தைத் தொடங்குவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனால் எப்போது இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

சில காரணங்கள் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித், புதிய தோற்றத்திற்கு மாறியுள்ளது. ரசிகர்களுடன் அவர் எடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.


இந்த செய்தியை பகிர