
கோலிவுட்டின் பிரம்மாண்டமான பட இயக்குநர் ஷங்கரின் மகள் தான் அதிதி தற்போது நடிகையாக நடுத்து வருகிறார். கடந்தாண்டு வெளியான விருமன் என்ற படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். அவரின் முதல் பாடத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் “மாவீரன்” என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு அவரது மூன்றாவது படத்தில் சிம்புவுடன் நடிக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டி வருகிறார். இருப்பினும் அது நிறைவேறவில்லை.
தற்போது விஷ்ணு விஷாலுடன் 3 வது படத்திற்கு கமிட்டாகியுள்ளார். இதன் அபிஸியல் டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த படத்தின் ஷுட்டிங் விரைவில் தொடங்கலாம் என அறிவித்துள்ளனர். இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் அடிக்கடி புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்குகிறார்.








