திமுக குடும்ப ஆட்சி 20 மாதங்களான நிலையில்….. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு என்ன நடந்தது….. அதிமுக செயலாளர் தம்பிதுரை கேள்வி!!!

இந்த செய்தியை பகிர

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் MGR இன் 106 வது பிறந்த தின நிகழ்வில் கலந்து கொன்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, தற்போது ஈரோடு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இத்தேர்தலில் பழனிசாமி தலைமையிலான அதிமுக மகத்தான வெற்றிவாகை சூடும் எனத் தெரிவித்தார். அது மட்டுமின்றி எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக குடும்ப ஆட்சி பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆன நிலையில் இன்னும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதுடன் அதிமுக காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு திட்டம்களை திமுக முடக்கியுள்ளது. எனவே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் எனவும் அதிமுகவிற்கு மகத்தான வெற்றி காத்திருக்கின்றது எனவும் தெரிவித்தார்.


இந்த செய்தியை பகிர