ஸ்டைல் லுக்கில் போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!…

Spread the love

தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். 1996 ல் ரம்பந்து என்ற தெலுங்கு படத்தில் ஒரு பாடல் காட்சியில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கினார். அதன் பின் 2012 ல் அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து புத்தகம், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், கதை திரைக்கதை வசனம் இயக்கம், திருடன் போலீஸ், காக்கா முட்டை படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். அதன் பின் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷுடன் இணைந்து வடசென்னை என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்து பேமஸ் ஆனார்.

தற்போது டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார். இருப்பினும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கிறார். அடிக்கடி டிசென்ட்டான புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை ஆனந்தப்படுத்துகிறார்.