
நடிகை ஸ்ரேயா சரணின் ஹாட் கிளாமர் கிளிக்ஸ்…….
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் எனப் பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ரேயா. 2001 ல் “இஷ்டம்” என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து சந்தோஷம், சென்னகேசவ ரெட்டி, நுவ்வே நுவ்வே, தூஜே மேரி கசம், எனப் பல திரைப்படங்கள் தெலுங்கில் நடித்துள்ளார்.
பின் 2003 ல் “எனக்கு 20 உனக்கு 18” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 2004 ல் “தோட தும் பத்லோ தோடா ஹீம்” என்ற ஹிந்தி படத்தில் நடித்துப் பிரபலமானார். பின் தொடர்ந்து ஹிந்தி மற்றும் தெலுங்கில் நடித்து வந்தார். 2005 ல் ஜெயம்ரவியுடன் இணைந்து “மழை” படத்தில் நடித்திருந்தார்.
தமிழில் ரஜினி, விஜய், தனுஷ், விஷால், விக்ரம் எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கத் தொடங்கினார். பின் 2018 ல் உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும் டென்னிஸ் வீரரான “ஆன்டரி கொஸ்சீயா” என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தற்போது சோசியல் மீடியாக்களில் மட்டும் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.




