
நடிகை பூமிகா சாவ்லாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட்ஸ்…….
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பூமிகா. 2000 ல் “யுவகுடு” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானாடர். 2001 ல் தமிழில் “பத்ரி” என்ற படத்தில் தளபதியுடன் இணைந்து நடித்தார். அதே ஆண்டில் “குஷி” என்ற தெலுங்கு படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார்.
அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு எனப் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த பூமிகாவுக்கு பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்தது. 2003 ல் “தேரே நாம்” என்ற ஹிந்தி படத்தில் நடித்தார். அதன் பின் ஹிந்தியில் “தில் ஜோப்பி கஹே” குடும்பம், சில்சிலை, தில் நே ஜிசே அப்னா கஹே, என்ற ஹிந்தி படத்தில் மட்டுமே நடித்து வந்தார். 2006 ல் மீண்டும் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
“சில்லுனு ஒரு காதல்” என்ற படத்தின் மூலம் இளசுகளின் காதல் கன்னியாக மாறினார். அதன் பின் தெலுங்கு படங்களில் மட்டுமே அதிகமாக நடித்து வந்தார். தற்போது “கண்ணை நம்பாதே” தமிழ் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் சுறு சுறுப்பாக இருக்கிறார். பளிச்சினு புகைப்படத்தைப் பதிவிட்டு இளசுகளை ஈர்கின்றார்.









