
விஜய் டிவியில் செந்தூர பூவே என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. இந்த சீரியலுக்கு முன்பே சன் டிவி, ஜீ தமிழில் சில சீரியல்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்களின் கனவு கன்னியாக இடம் பிடித்தார்.
அதன் பின் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ருத்ரதாண்டவம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். சன்னி லியோன் நடிப்பில் ஓ மை கோஸ்ட் என்ற திகில் படத்தில் சதிஷ்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தற்போது சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதே வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் பிளாக் அண்ட் ஒயிட் கவர்ச்சியான உடையில் ரீல்ஸ் பதிவுசெய்து ரசிகர்களை கிறங்கடிக்கிறார்.




