
நடிகை மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஸ்….
மலையாள பின்னணி பாடகி மற்றும் திரைப்பட நடிகையாக வலம் வருபவர் மடோனா செபாஸ்டியன். 2015 ல் “பிரேமம்” என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் மூன்றாவது கதாநாயகியாக அறிமுகமானார். பின் தமிழில் விஜய் சேதுபதி நடித்த “காதலும் கடந்து போகும்” என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் கவண், ஜூங்கா படத்திலும் நடித்துள்ளார். தனுஷுடன் இணைந்து “ப. பாண்டி” படத்திலும் நடித்திருந்தார். கடைசியாகத் தமிழில் “வானம் கொட்டட்டும்” படத்தில் நடித்தார்.
தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள மடோனாவுக்கு தற்போது படவாய்ப்புகள் பெரிதும் அமையவில்லை. அதனால் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியில் இறங்கிவிட்டார். அந்த வகையில் தற்போது பார்ட்டி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.


