1985ம் ஆண்டு ஆண் பாவம் படம் மூலமாக பிரபல்யமானவர் நடிகை சீத்தா. அவர் தமிழ் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என ஏராளமான படத்தில் நடித்தார். பின்னர் 1991ம் ஆண்டு அதற்கு எல்லாம் ஓய்வு கொடுத்துவிட்டு நடிகர் மற்றும் இயக்குனரான பார்த்தீபனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக, அவர்கள் பிரிந்துவிட்டார்கள். அதன் பின்னர் சீத்தா, சதீஷ் என்ற நபரை திருமணம் செய்துகொண்டார்.
திரும்பவும் அவருக்கு திருமண வாழ்கையில், பிரச்சனை. சதீஷையும் விவாகரத்து செய்து விட்டார். இந்த நிலையில் தான் பல மேடைகளில் பேசும் போது நடிகை சீத்தா அவர்கள் பார்த்திபன் மிகவும் நல்லவர். அவருடன் இருந்த தருணங்கள் என் வாழ்நாளில் மறக்க முடியாதவை என்று எல்லாம் பேசி வருகிறார். அவர் நேரடியாகவே பார்த்திபனை, சந்தித்தவேளை நாம் மீண்டும் இணையலாமா என்று கேட்டுள்ளார்.
ஒன்றாக வாழ ஆசைப்படுவதாக கூறியுள்ளார். ஆனால் முடியவே முடியாது என்று பார்த்திபன் மறுத்து விட்டதாக ஷோஷல் மீடியாக்களில் செய்தி பரவி வருகிறது. இது உண்மையில் நடந்ததா ? என்று தெரியவில்லை. ஆனால் கோடம்பாக்க வட்டாரத்தில் இப்படி ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.