ரஷ்ய அதிபர் வீட்டின் மேல் ட்ரோன் தாக்குதல் உக்ரைன் ஆரம்பித்த புது யுத்தம்

Spread the love

ரஷ்யாவின் வெள்ளை மாளிகை என்று அறியப்படும் கிரம்பிளின்(Kremlin) மாளிகை மீது நேற்றைய தினம் மாலை ட்ரோன் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. உக்கிரைன் நாட்டில் தயாரான ஆளில்லா விமானம், பறந்து சென்று இந்த மாளிகையை துல்லியமாக தாக்கியுள்ளது.

ரஷ்ய அதிபர் குறித்த மாளிகையில் தங்குவது இல்லை என்றாலும், அங்கே அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இந்த வேளையைப் பாவித்தே உக்ரைன் இந்த தாக்குதலை துல்லியமாக நடத்தியுள்ளது. இருப்பினும் தாக்குதல் நடந்த நேற்றைய தினம் அதிபர் புட்டின் அந்த மாளிகைக்குச் செல்லவில்லை என அறியப்படுகிறது.

இதனால் ரஷ்யா கடுமையாக ஆவேசம் அடைந்துள்ளது. ரஷ்யாவின் முன் நாள் அதிபரும், மற்றும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சரும் ஒரே கருத்தை வெளியிட்டுள்ளார்கள். அது என்னவென்றால், உக்ரைன் அதிபரை இல்லாது ஒழிக்கவேண்டும் என்பது தான் அது. தாக்குதல் வீடியோ கீழே இணைப்பு.

Leave a Reply