இலங்கையின் இனப்படுகொலைக்கு காரணமான இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு….. கனடாவுக்கு நுழையத் தடை …… கனடிய அரசின் உத்தரவு!!!

இந்த செய்தியை பகிர

கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாகச் செயற்பட்ட இலங்கையின் மிக முக்கிய நான்கு தலைகளுக்குத் தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது கனடிய அரசு. அதாவது குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இவர்களை கனடாவிற்குள் அனுமதிக்க முடியாது என அறிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபாய ராஜபக்ஷ, மகிந்த ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ உயர் அதிகாரிகளாக இருந்த சாந்த பிரசாத், ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் கனடாவில் எந்தவிதமான கொடுக்கல் வாங்கள்களையும் மேற்கொள்ள முடியாததுடன், அவர்களுக்கு கனடாவில் ஏதேனும் சொத்துக்கள் இருந்தால் அதுவும் முடக்கப்படும் என  அறிவித்துள்ளது.


இந்த செய்தியை பகிர