நான்கு திருமணம் செய்த பெண் 02 ஆம் கணவருடன் உல்லாசம்!!!

இந்த செய்தியை பகிர

உல்லாசம்

இந்தியாவின் செங்கல்பட்டு மாவட்டத்தினைச் சேர்ந்த 25 வயதுடைய நடராஜன் என்பவர் அபிநயா என்ற 28 வயதுடைய பெண்னை காதலித்து திருமணம் செய்தார் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர், இந்நிலையில் கடந்த 19 ஆம் திகதி அபிநயா திடிரென வீட்டிலிருந்த 17 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் பணம் என்பவற்றை திருடிவிட்டு மாயமானார். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த நடராஜன் பொலிஸில் முறையிட்டார். இதற்கமைய தனிப்படையமைத்து அபிநயாவை பொலிஸார் தேடியநிலையில் விடுதி ஒன்றில் இருந்து கைது செய்த பொலிஸாருக்கு இவருடைய திருவிளையாடல் அம்பலமானது.

இவர் ஏற்கனவே 03 நபர்களை திருமணம் செய்து அதில் 01ஆம் மற்றும் 03 நபருடன் குறைந்தது 10 நாட்கள் வாழ்ந்துவிட்டு பின்னர் அவர்களிடம் இருந்த நகையினை எடுத்துவிட்டு மாயமாகியதாகவும், தனது இரணடாவது கணவருக்கு மாத்திரம் 08 வயதில் ஒரு குழந்தை இருப்பதாகவும் அவருடன் மாத்திரம் அதிக நாள் உல்லாசம் அனுபவிப்பதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஏனைய 03 பேரிடம் இருந்து சுருட்டிய பணம் மற்றும் நகையினை 02 வது கணவர் செந்தில் குமாரிடம் கொடுத்து இருவரும் சொகுசு வாழ்க்கை நடாத்தியுள்ளனர். இதனையடுத்து 02 வது கணவரைத் தேடி பொலிஸார் வலைவிதித்துள்ளனர்.


இந்த செய்தியை பகிர