கொலை வெறி பிடுத்த மாஸா இருக்கும் KGF-3 அப்டேன் பார்த்தீர்களா மக்களே ?

Spread the love

கன்னடத்தில் இது போன்ற திரைப்படங்கள் எல்லாம் எடுப்பார்களா என யோசிக்க வைத்த திரைப்படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் அசத்தலாக நடித்திருந்த இந்த படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகம் இரண்டும் வசூலில் சக்கை போடு போட்டது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பல கோடிகளை வசூல் செய்தது.

கோலார் தங்க சுரத்தில் நடப்பது போல இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. ஒரு ஏழை சிறுவன் எப்படி டானாக மாறி கேஜிஎப்-க்கு தலைவனாகிறான் என்பதுதான் கதை. இதை அசத்தலாக திரைக்கதை அமைந்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற பல காட்சிகள் கூசும்ப்ஸ்களை அதிகரித்தது. குறிப்பாக சண்டை காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இரண்டாம் பாகத்தின் முடிவில் மூன்றாம் பாகம் தொடரும் என்பது போல கதை முடிக்கப்பட்டிருந்து.?

இந்நிலையில், கேஜிஎப் 2 வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் அதை கொண்டாடும் விதமாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் கேஜிப் மற்றும் கேஜிஎப் 2 படங்களில் இடம் பெற்ற சில காட்சிகள் இடம் பெற்றிருந்தது. முடிவில் 3 என காட்டுகிறார்கள். எனவே, விரைவில் இப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு கேஜிப் பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.