தாம் தயாரிக்கும் படங்களில், நடிக்கும் நடிகர்களை மிகவும் கெளரவமாக நடத்தி. அவர்களுக்கு அதி உச்ச வசதிகளை செய்துகொடுக்கும் நிறுவனமாக லைக்கா(LYCA) உள்ளது. லைக்கா தயாரிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் சில காட்சிகள், திருப்பதியில் படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல ஹாசன் ஆகியோர் திருப்பதியில் தங்கி, படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில்…
அங்கே சரியான வசதிகள் கொண்ட ஹோட்டல் இல்லை. அதனால் கடப்பாவில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றை கமல ஹாசனுக்காக லைக்கா நிறுவனம் புக் செய்து உள்ளது. அதுபோக திருப்பதியில் இருந்து, கடப்பா செல்ல ஹெலி வசதியையும் லைக்கா நிறுவனம் செய்துகொடுத்துள்ளது. இதனால் கடப்பாவில் நடக்கும் படப்பிடிப்புக்கும் , ஹோட்டலுக்கும் சரி கமல ஹாசன் “””பறந்தாலும் விடமாட்டேன்””” என்று பாடிப் பாடிச் சென்று வருகிறார்….
மிகப் பெரிய வெற்றிப் படமாக இந்தியன் 2 அமைய உள்ளது. சில தடங்கல்கள் ஆரம்ப காலத்தில் இருந்தாலும். தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஒட்டுமொத்தத்தில், மிகவும் வித்தியாசமான கதை. விக்ரம் 2ஐ விட அதிக வசூலை இந்தப்படம் பெறும், என்று ஏற்கனவே பேசப்பட்டு வருகிறது.