வரலாற்றில் இடம்பிடித்த இந்தியப் பெண்…. அதுவும் அமெரிக்காவின் துணை ஆளுநராக!!!

இந்த செய்தியை பகிர

அமெரிக்காவின் துணை ஆளுநராகப் பதவியேற்றுள்ளார் இந்தியாவின் ஜதராபாத்தில் பிறந்த அருணா மில்லர், இவர் தனக்கு 07 வயதாக இருக்கும்போது தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு இடம்பெயந்தார், தற்போது 58 வயதாகும் இவர் கடந்த 2022 ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கி பாரிய வெற்றி பெற்று இந்தியாவின் துணை நிலை ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்டார்.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இவர் தனது பதவியேற்பு நிகழ்வின்போது இந்துக்களின் புனித நூலாகக் கருதப்படும் பகவத் கீதை மீது சத்தியம் செய்து அமெரிக்காவின் துணை ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்டார். இதனையடுத்து கருத்து தெரிவித்த மில்லர், என்மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நன்றியினைத் தெரிவிப்பதோடு உங்களுக்காக என்றென்றும் பாடுபடுவேன் எனத் தெரிவித்தார்.


இந்த செய்தியை பகிர