ATHIRVU.COM
Saturday, August 18 2018

LYAC TV

முள்ளிவாய்க்கால் தமிழர் படுகொலை நினைவேந்தல் ; மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சி.!

May 18, 2018    1265

கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் தமது தார்மீக உரிமையான தனி நாடு கேட்டு அற வழியிலும், ஆயுத வழியிலும் நெடுங்காலமாக களமாடிய ஈழத்தமிழர்கள் மீது வல்லாதிக்க நாடுகளின் துணையுடன் இறுதிப்போரை நிகழ்த்தியது சிங்கள பேரினவாத அரசு. அப்பட்டமான போர்குற்றத்தில் ஈடுபட்ட சிங்கள அரசு குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட அதிகளவிலான தமிழர்களை கொன்றொழித்தது. இலங்கையில் முள்ளிவாய்க்கால் என்னும் இடத்தில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரினால் கொன்றொழிக்கப்பட்ட தமிழர்களை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் மே 17 இயக்கத்தின் சார்பில் தமிழர் கடலாம் மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டும் மெரினா கடற்கரையில் தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி எதிர்வரும் 20 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உணர்ச்சி பாவலர் காசி ஆனந்தன், இயக்குனர் கௌதமன் உள்ளிட்ட ஈழ ஆதரவு தலைவர்கள் மற்றும் அமைப்பினர் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து நடத்தியதற்காக திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்க பொறுப்பாளர்கள், தமிழர் விடியல் கட்சியினர் சிலர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 


Loading...