Wednesday, July 18 2018

LYAC TV

150 அடிக்கு எரிப் பிழம்பை பீச்சியடித்த எரிமலை- ஹவ்வாய் தீவுகளில் 10,00 பேர் தவிப்பு

May 05, 2018    3275

ஹவ்வாய் தீவு என்றாலே அது உல்லாசபுரி ஆகும். ஆண்டு தோறும் பல லட்சக் கணக்கானவர்கள் ஹவ்வாய் தீவுகளுக்கு சென்று வருகிறார்கள். அங்கே பல ஆண்டுகள் உறங்கும் நிலையில் இருந்த பாரிய எரிமலை ஒன்று, நேற்று இரவு வெடித்து பெரும் பூகம்பத்தை தோற்றுவித்துள்ளது. எரிமலை வெடிக்கும் போது சுமார் 150 அடிக்கு அதன் தீ பிழம்புகள் வானில் சென்றுள்ளது.

அத்தோடு அது கக்கும் புகையானது சூழவுள்ள பல நாடுகள் மேல் பரவி, பெரும் பீதியை கிளப்பியுள்ளது என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதோடு. அன் நாட்டில் சுமார் 10,000 பேர் இடம்பெயர்ந்து வருவதாகவும் மேலும் அறியப்படுகிறது.


 


Loading...