மக்கள் திமுகவினருக்கு சரியான பாடம் விரைவில் புகட்டுவார்கள்….. அதிமுக உறுப்பினர் பாலாஜின் உரை!!!

இந்த செய்தியை பகிர

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஆபுசு இன் 106 வது பிறந்த தின நிகழ்வில் கலந்து கொன்டு உரையாற்றிய அதிமுக உறுப்பினர் ராஜேந்திர பாலாஜி, தற்போதய திமுக ஆட்சியில் மக்களது வாழ்வாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையேற்றமானது என்றுமில்லாதவாறு மிக மோசமாக அதிகரித்துள்ளதாகவும் தெரவித்தார், அத்துடன் திமுக மக்களை பாதுகாக்க ஆட்சி நடாத்தப்படவில்லை மாறாகக் குடும் ஆட்சியைப் பாதுகாக்கவே செயற்படுவதாகத் தெரிவித்தார்.

எனவே தேர்தல் எப்போது வரும் என மக்கள் காத்திருப்பதாகவும் வெகுவிரைவில் திமுகவினருக்கு நல்லதொரு பாடம் புகட்டுவார்கள் எனவும் குறிப்பிட்டார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான காலம் நெருங்குவதனால் அது திமுக கட்சிக்குப் பீதியை கிளப்பியுள்ளதாகத் தெரிவித்தார். எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கைக்கு அமைவாக மக்கள் ஒன்றினைந்து மீண்டும் அதிமுகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.


இந்த செய்தியை பகிர