மீண்டும் தேர்தலில் வெற்றிபெற…. பிரதமர் மோடியின் தந்திரோபாயங்களுடனான அதிரடி உத்தரவு!!!

இந்த செய்தியை பகிர

பாஜக தேசிய பொதுக்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது, இதில் கலந்து கொன்டு உரையாற்றிய இந்தியப் பிரதமர் மோடி மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 400 நாட்கள் மாத்திரம் இருப்பதால் பாஜக தொண்டர்கள் உடணடியாகக் களத்தில் குதிக்க வேண்டும், அதாவது ஒவ்வொரு கிராமமாகச் சென்று குறிப்பாக எல்லைக் கிராமங்களுக்கும் சென்று மக்களைத் நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர்களுக்குப் பாஜகவின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்து தெளிவாக விளக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தொண்டர்கள் வாக்குச் சேகரிப்பதனை மட்டும் நோக்காகக் கொன்டு செயற்படாமல் நாட்டின் நலன் மற்றும் மக்களின் சமூக ரீதியான நலன்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார். இதன்போது கருத்து தெரிவித்த பாஜக உறுப்பினர்கள் மீண்டும் ஒரு முறை பிரதமர் மோடி தலமையில் பாரிய வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் எனத் தெரிவித்தனர்.


இந்த செய்தியை பகிர