ஒயிட் ரோஸ் போல பளிச்சினு போஸ் கொடுக்கும் பிரியங்கா மோகன்!…..

Spread the love

2019 ல் “ஒன்த் கதே ஹீலா” என்ற கன்னட படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். அதனை தொடர்ந்து “நானிஸ் கேங்லீடர்” என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான இவர் அடுத்து ஸ்ரீகாரம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதன் பின் 2021 ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். நெல்சன் இயக்கிய இந்த படம் மிகப்பெரும் வெற்றியை கொடுத்த நிலையில் பிரியங்காவுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ‘டான்’ படத்தில் நடித்துள்ளார். தற்போது தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் தனுஷ் நடிப்பில் தயராகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதே போல் வெற்றிமாறம் இயக்க உள்ள “வாடிவாசல்” படத்தில் சூர்யாவுடன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அத்துடன் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். தற்போது அவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.