
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் பல வரலாற்று தகவல்களை அலசி வருகின்றனர். அதே நேரத்தில் இந்தத் திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரங்களின் தேர்வுகளையும் அவர்களைப் பற்றிய சுவாரசியமான தகவல்களையும் ரசிகர்கள் ஆராய்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் Pஸ்௨ இல் பொன்னியின் செல்வனின் சித்தப்பாவாக மதுராந்தகர் கதாபாத்திரத்தில் நடிகர் ரகுமான் நடித்திருப்பார். இவர் சோழ ஆட்சிமகுடம் தமக்கே உரியது என உரிமைக்கொண்டாடி வந்த நிலையில் இவருக்கு ஆதரவாக பளுவேட்டையர்களும் சிற்றரசர்களும் உடனிருந்து ஆட்சியைப் பிடிக்க உதவிசெய்வர். அதேநேரத்தில் சோழப் பகுதியைப் பிரிப்பதில் பெரிய ஆர்வமில்லாத இவருக்கு ராஷ்டிரகூடர்கள் தாமாகவே வந்து உதவிசெய்வதுபோல காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.அந்த வகையில் ராஷ்டிரகூடர்களின் இளவரசி மாதுளியை மதுராந்தகருக்கு மணமுடித்து வைக்கலாம் என்று ஒரு கேரக்டர் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்படும்.
அந்த மாதுளியாக நடித்தவர் கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நடனக்கலைஞர் என்பதும் அவருடைய பெயர் ஸ்ரீமா உபாத்யாயா என்பதும் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.ஒரே ஒரு சீனில் மட்டும் நடித்திருந்த மாதுளியை மறக்காத ரசிகர்கள் அவரைத் தேடிக் கண்டுபிடித்ததோடு அவருடைய புகைப்படங்களையும் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.
