
தமிழ், கன்னடம், மலையாள படங்களில் துணை வேடங்களில் நடித்தவர் ஷாக்ஷி அகர்வால். 2013 ல் ரீல்ஸான “ராஜா ராணி” படத்தில் ஒரு சீனில் நடித்து திரையுலகில் அறிமுகமானார். பின் 2014 ல் “மென்பொருள் காண்டா” என்ற கன்னட படத்தில் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து திருட்டு விசிறி, அதியன், கால, கா கா கா போ, விசுவாசம் போன்ற பல படங்களில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வளவு படம் நடித்தும் பிரபலமாகவில்லை என்று விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 யில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார்.
பின் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். தற்போது சில படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சோசியல் மீடியாக்களிலும் அவ்வவ்போது போட்டோக்களை பதிவு செய்கிறார். அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை பதிவு செய்யும் ஷாக்ஷி தற்போது சேலையில் தங்க சிலை போல் மின்னி தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.





