5 நாளைக்கு தொடர்ந்து லண்டனை தாக்கவுள்ள கடும் குளிர்- மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

இந்த செய்தியை பகிர

அடுத்து 5 நாட்களும் பிரித்தானியாவை கடும் குளிர் தாக்கவுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் பல பிரதேசங்களில் -11க்கு குளிர் சென்றுள்ள நிலையில். சில மணி நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவாகியுள்ளது.

தேவை இல்லாமல் வாகனத்தை எடுத்து வீதியில் செல்லவேண்டாம் என்றும். அவசர தேவைகளுக்கு மட்டுமே வாகனத்தை ஓட்டுவது நல்லது என்றும் பொலிசார் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இதே எச்சரிக்கையை இன்சூரன்ஸ் கம்பெனிகளும் தமது வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ளது.

அந்தாட்டிக்காவில் ஏற்பட்ட பெரும் குளிர் வெடிப்பு காரணமாக, அங்கே உள்ள உறையும் பனிக்காற்று நகர்ந்து, பிரித்தானியாவை கடந்து சென்றுகொண்டு இருக்கிறது. இதனால் மேலும் 5 நாட்களுக்கு கடும் குளிர் நீடிக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.


இந்த செய்தியை பகிர