
இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாட்டு மக்களுக்கும், எதிர்கட்ச்சியினருக்கும் விசேட அறிவித்தல் ஒன்றினை வழங்கினார். அதாவது நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் வரை பாராளுமன்றத்தினை கலைக்கப்போவதில்லை எனவும், அரசாங்கத்தினை மாற்றுவதற்கு எவரும் முயற்சித்தால் அதற்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் கூறியதாவது, மக்களுக்கு தங்கள் எதிர்ப்புக்களை கூறி ஆற்பாட்டங்களை மேற்கொள்ள அடிப்படை உரிமையுண்டு எனவும், அவ்வாறு மேற்கொள்வதாயின் வீதியில் தடைகளை மேற்கொள்ளாது, பொலிஸில் உரியவாறு முன்னறிவித்தல் பெறப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். எனவே மேற்கூறியவற்றுக்கு கட்டுப்படாவிட்டால் இராணுவத்தினையோ அல்லது அவசரகால சட்டத்தினையோ பிரகடனப்படுத்த வேண்டி ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.