ஐரோபாவில் மனித கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்கள்… 14 பேர் சிறைவாசம்!!!

இந்த செய்தியை பகிர

தற்பொழுது ஜரோப்பா கண்டம் முழுவதும் இலாபகரமான தொழிலாகச் சட்டரீதியற்ற முறையில் மனிதர்களை நாடுவிட்டு நாடு கடத்துதல் பிரபல்யம் அடைந்துள்ளது. இந்நிலையில் பிரான்ஸில் தங்கியிருந்து இவ்வாறான கடத்தல் செயற்பாடுகளை முன்னெடுத்த இலங்கையினைச் சேர்ந்த 14 பேருக்குப் பிரான்ஸ் நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்தச் செயற்பாட்டினை வழிநடாத்திய பிரதான சூத்திரதாரியாகப் பிரான்ஸில் உள்ள பிரபல கடை உரிமையாளருக்கு 5 வருட சிறைத்தண்டனையும், ஏனையவர்களு 4 வருட தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இவர்கள் இலங்கை மற்றும் பங்களாதேஷிலிருந்து சட்டவிரோத குடியேற்ற வாசிகளை நாடு கடத்தும் செயற்பாட்டில் மிக நீண்ட காலமாக ஈடுபட்டு வந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தடன் இவர்கள் எல்லையில் உள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கி இந்த மனித கடத்தல் செயற்பாட்டை முன்னெடுத்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இந்த செய்தியை பகிர