ஆயுர்வேத சிகிச்சைக்குச் சென்ற பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த நாட்டு வைத்தியர்

Spread the love

யோகா பயிற்சிக்காகப் பெல்ஜியம் நாட்டிலிருந்து கேரளா வந்த பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் நாட்டு வைத்தியர். ஆயுர்வேத சிகிச்சைக்காகச் சென்றபோது மிரட்டிப் பாலியல் பலாத்காரம் செய்த அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் பகுதியில் கோட்டூரில் ஷாஜி என்கிற நாட்டு வைத்தியர் ஆயுர்வேத சிகிச்சை மையம் நடத்தி வருகிறார். நெய்யார் அணை பகுதியில் நிறைய யோகா பயிற்சி மையங்கள் உள்ளன. அங்குள்ள பயிற்சி மையத்தில் யோகா பயிற்சிக்காகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகப் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த இளம் பெண் வந்திருக்கிறார். அப்பகுதியில் உள்ள விடுதியில் தங்கி இருந்து யோகா பயிற்சி மேற்கொண்டு வந்திருக்கிறார்.

அப்போது அதே பகுதியில் இருந்த நாட்டு வைத்தியருடன் அந்தப் பெண்ணுக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பழக்க வழக்கத்தில் தனது சிகிச்சை மையத்திற்கு வந்து ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ளுமாறு ஷாஜி அழைப்பு விடுத்திருக்கிறார். அதன்படி வந்த அவர்களை சில தினங்களுக்கு முன்பாக ஷாஜியின் ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு சென்றிருக்கிறார் அந்தப் பெல்ஜியம் பெண். அப்போது ஆயுர்வேத சிகிச்சை செய்கிறேன் என்று சொல்லி அந்தப் பெண்ணை மிரட்டிப் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் ஷாஜி. இதில் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் நெய்யார் அணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாட்டு வைத்தியர் ஷாஜியே கைது செய்துள்ளனர். அவர் வேறு ஏதேனும் பெண்ணிடம் இது போன்ற செயலில் ஈடுபட்டு உள்ளாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.