உக்ரைனை ஒருபோதும் ரஷியாவினால் வெற்றிகொள்ள முடியாது…. அமெரிக்கா ஜனாதிபதியின் அதிரடி பேச்சு!!!!

Spread the love

உக்ரைன் மீது ரஷ்யா போர்தொடுத்து நாளையுடன் ஒரு வருடம் நிறைவடைகின்றது. இந்நிலையில் இராணுவ வல்லரசான ரஷ்யாவினை எதிர்த்துத் தொடர்ந்து உக்ரைன் பதிலடி கொடுத்து வருதாகவும் இவர்களுக்குத் தேவையான இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை தம்முடன் இணைந்து சில ஜரோப்பிய நாடுகள் தொடர்ச்சியாகச் செய்து வருவதாக உக்ரைனுக்கு திடீர் விஜயத்தினை மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோப்பைடன் அந்நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலயே இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இப்போரில் உக்ரைன் வலிமையுடன் போராடுவதாகவும், முக்கியமாக நாட்டுமக்களின் சுதந்திரத்திற்காகப் போராடுவதாகவும், நாங்கள் ரஷ்யாவை அழிக்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை எனவும் உக்ரைன் நாட்டு மக்களின் உரிமைக்காகப் போராடுவதாகத் தெரிவித்த அவர், உக்ரைனை ஒருபோதும் ரஷ்யாவினால் வெற்றி கொள்ள முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.