வெளிநாட்டிலும் வாரிசுக்கு பெரும் பிரச்சனை எந்த தியேட்டரில் ஓடப் போகிறது என்பதில் குழப்பம்

இந்த செய்தியை பகிர

தமிழ் நாட்டில் ஒரே திகதியில் அஜித் நடித்த துணிவும், விஜய் நடித்த வாரிசும் வெளியாகிறது. விஜய் படம் வெளியாகிறது அதனால் உங்கள் படத்தை சற்று தள்ளி வைக்கலாமா என்று கேட்ட இயக்குனருடன் கடுப்பாகப் பேசிய அஜித் , கண்டிப்பாக அதே திகதியில் படம் வெளியாகவேண்டும் என்று கூறிவிட்டார். அந்த வகையில் விஜய் படத்தோடு மோதுவது என்பதில் அஜித் மிக மிக உறுதியாக இருக்கிறார். இன் நிலையில் அஜித் படமான துணிவை வெளிநாட்டில் போட லைக்கா நிறுவனம் வாங்கி விட்டது. லைக்கா நிறுவனம் சுறுசுறுப்பாக செயல்பட்டு எல்லா திரை அரங்கிலும் திரையிட உள்ளார்கள். ஆனால்

வாரிசு படத்தை வெளிநாட்டில் உள்ள புது நிறுவனம் ஒன்றுக்கு கொடுத்துள்ளார்கள். இதனால் அந்த நிறுவனம் வழமைக்கு மாறாக புதிய ஆட்களிடம் படத்தை திரையிட கொடுத்துள்ளது. பலவேறு நாடுகளில் உள்ள புதிய நபர்கள், விஜய் படத்தை தமது நாடுகளில் திரையிட உள்ளதால். இது சரியாக நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது இவ்வாறு இருக்க தமிழ் நாட்டில் இரவு 1 மணிக்கு முதல் காட்சியாக அஜித் படம் போடப்படுகிறது. பின்னர் அதிகாலை 4 மணிக்கு ..

விஜய் படமான வாரிசு போடப்படுகிறது. எப்படிப் பார்த்தாலும் அஜித் படமே வசூலில் பெரும் சாதனை படைக்கப் போகிறது என்ற பேச்சு இப்பவே அடி பட ஆரம்பித்து விட்டது. வாரிசு படத்தை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே பெரும் சிக்கலில், உள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.


இந்த செய்தியை பகிர