ஒரு நகரமே லாக் டவுன் 10,000 ராணுவம் தோடுகிறது ஒரு கேங்கைப் பிடிக்க..

இந்த செய்தியை பகிர

எல்- சல்வடோர் நாட்டில் இதுவரை நடக்காத பெரும் ஆப்பரேஷன் ஒன்று நடக்க தொடங்கியுள்ளது. அன் நாட்டில் உள்ள, சோயாபாங்கோ என்னும் நகரத்தை முற்று முழுதாக லாக் டவுன் செய்துள்ள அரசு. அங்கே 10,000 ராணுவத்தை அனுப்பி வீடு வீடா சோதனைகளை நடத்த ஆரம்பித்துள்ளது. இது எதற்காக என்று கேட்டீர்கள் என்றால், ஒரு குழுவைப் பிடிக்கத் தான். எல்- சல்வடோர் நாட்டில் பெரும் குழு மோதல் உள்ளது. அதனை விட ,

கிராமத்திற்கு கிராமம் நகரத்திற்கு நகரங்கள் என்று எல்லா இடங்களிலும் போதைப் பொருள் கடத்தல் கும்பல் உள்ளது. இவர்களே ஒரு அரசாங்கம் போல செயல்பட்டு வருகிறார்கள். கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் எல் சல்வடோர் நாட்டின் ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றிய, நையீப் இந்த குழுக்களை ஒழிப்பதாக சபதம் எடுத்தார். அவர் அதனை திறம்பட செய்ய ஆரம்பித்துள்ளார். அதன் ஒரு அங்கமாகவே இந்த பெரும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

பல நகரங்களில் ஏற்கனவே களையெடுக்கப்பட்டு விட்டது. தற்போது இந்த நகரில் ஒரு பெரும் குழுவை கைது செய்ய இந்த நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. இதில் பொலிசாரும் சேவையில் அமர்த்தப்பட்டு உள்ளார்கள்.


இந்த செய்தியை பகிர